சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?’ – நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்..!

Advertisements

இந்தியாவில் சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு குறைவு என்று நெதர்லாந்து பிரதமர் ராப்ஜெட்டன்,  கருத்திற்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட, பெரும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு இந்தியா என்று இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ்ராப் பதிலளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி 5 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு, நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறித்து, அந்த நாட்டின் பிரதமர் ராப்ஜெட்டன், பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பெரியளவில் இல்லை எனவும், அதுபோன்று இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளும் அழுத்தத்தில் உள்ளன எனவும், இவர்களில் முஸ்லிம்களும், பிற சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர் என்று பேசியிருந்தார். அதன்பின் ராப்ஜெட்டன் கருத்திற்கு, இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ்ராப் பதிலளித்துள்ளார்.

அப்போது, நமது நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக அமைப்பு குறித்த அடிப்படைப் புரிதல் மற்றும் போதுமான தகவல்கள் இல்லாததாலேயே இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன எனவும், 140 கோடி மக்கள்தொகையையும், 5-ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட, பெரும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு இந்தியா என்றும்,  இந்து மதம், பௌத்தம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதம் ஆகியவை இங்குதான் பிறந்தன என்றும், அனைத்து மதங்களும் பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்து வருகின்றன என்றும் இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ்ராப் பதிலளித்தார்.

மேலும், சமீபத்திய தேர்தல்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பங்கேற்பு, இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கு ஒரு சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *