
டி.டி.வி தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால்தான், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன் என்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார். .அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றுகொண்டார்.
1-ஆம் தேதி 234 சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டோம், பிறகு சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு என்னைப் பேச அழைத்தபோது, முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை வாழ்த்தி பேசினேன்.
இதனையடுத்து, டி.டி.வி.தினகரன் தன்னை கட்சியை விட்டு நீக்கியதால்தான், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன் என்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் தெரிவித்துள்ளார்.


