புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் தயார்!

Advertisements

சென்னை:

பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) எல்எச்பி ரெயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரெயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், மும்பை புற நகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏ.சி. வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐ.சி.எப்.-இல் தயாரிக்கப்படுகின்றன.

இதேபோல், தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை ரெயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான தயாரிப்புப் பணி ஐ.சி.எப். தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாகப் பணி நிறைவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ரெயில் இயக்கம்குறித்து ஐ.சி.எப்.அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியது,

முழுவதும் ஏ.சி. வகுப்புப் பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், நடப்பு நிதியாண்டு தெற்குரெயில்வேக்கு ஒரு ரெயில் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரெயில் தயாரிப்புப் பணி முடிவடைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *