சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி விவாகரத்து?

Advertisements

சென்னை: சுப்ரமணியபுரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சுவாதி. தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 2018ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பைலட் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டார். கணவருடன் இந்தோனேஷியாவில் செட்டில் ஆனார். திருமணமாகி ஓரே ஆண்டில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். 2019ல் ‘திருசூர்புரம்‘ எனும் மலையாள படத்தில் நடித்தார். இதனால் கணவருக்கும் சுவாதிக்கும் பிரச்னை என கூறப்பட்டது. 2020ம் ஆண்டில் தன்னுடைய திருமண புகைப்படங்கள், கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து சுவாதி கணவரை பிரிந்துவிட்டார் என கூறப்பட்டது. இது பற்றி சுவாதியிடம் கேட்டபோது, சினிமா வேறு, சொந்த வாழ்க்கை வேறு. எனது சமூக வலைத்தளங்களில் சொந்த வாழ்க்கையை கொண்டு வர விரும்பவில்லை எனக் கூறி சமாளித்தார். தற்போது சுவாதிக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றி அவர் விளக்கம் தராமல் மவுனம் கடைப்பிடித்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *