R. N. Ravi: உருவப் படத்தை எரிக்கும் போராட்டத்தில் மாணவர்கள்!

Advertisements

ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும் பல்கலைக்கழகங்களில் சனாதான கொள்கையைப் புகுத்தும் நடைமுறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்ந்து ஆளுநரின் புகைப்படங்களை இந்திய மாணவர் சங்கத்தினர் எரிப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநரின் புகை படங்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்க கேட்டனர்…

நெல்லை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு தேடுதல் குழுவை நியமித்த ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு ஆளுநரின் உருவப் படத்தை எரிக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டதால் பரபரப்பு.போலீசார் ஆளுனரின் புகைப்படங்களைத் தங்களிடம் ஒப்படைக்க கோரிய நிலையில் மாணவர்கள் ஆளுனர் புகைப்படங்களைக் கிழித்து போட்டு ஆளுநரைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்யத் தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியும் துணைவேந்தர் நியமனம் செய்யும் குழுவில் இருக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

அதற்குத் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி, முதல் முறையாகப் பல்கலைக்கழக மானிய குழுப் பிரதிநிதி ஒருவரும் இந்தத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுநரின் அறிவிப்பை எதிர்த்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆளுநர் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும் பல்கலைக்கழகங்களில் சனாதான கொள்கையைப் புகுத்தும் நடைமுறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்ந்து ஆளுநரின் புகைப்படங்களை இந்திய மாணவர் சங்கத்தினர் எரிப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநரின் புகை படங்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்க கேட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கையில் இருந்த புகைப்படங்களைக் கிழித்து போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆளுநரைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர் இதனால் பல்கலைக்கழக வளாகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது மாணவர் சங்கத்தின் போராட்டம் காரணமாகப் பல்கலைக்கழகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *