CM Stalin: டெல்லி செல்கிறார்!

Advertisements

சென்னை டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதற்கிடையே, செப்டம்பர் 9-ம்தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விருந்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளை மறுநாள் (சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *