Puducherry: கல்வி துறை அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்!

Advertisements

புதுச்சேரி கல்வி துறையின் முன்பு முதலாம் ஆண்டு படிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் மடிக்கணினி வழங்காத புதுச்சேரி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள கல்வி துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தனர். இதில் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பிறகு மடிக்கணினி வழங்க உள்ளோம் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பெயரைப் பதிவு செய்து, இன்று நாங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஏழை எளிய மாணவிகள் எங்களுக்கு வழங்காமல் இருந்ததை கண்டித்து இன்றுபுதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள கல்வி துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,

புதுச்சேரி கல்வி துறையின் முன்பு முதலாம் ஆண்டு படிக்கும் அரசு கலைக் கல்லூரி மாணவிகள்  மடிக்கணினி வழங்காத புதுச்சேரி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள கல்வி துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.மேலும் புதுச்சேரி அரசு ஏமாற்றி வருகிறது.

இதனைக் கண்டித்து இன்று நாங்கள் ஒன்று சேர்ந்து கல்வி துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் என்று பவித்ரா கலைக் கல்லூரி மாணவி பேட்டி அளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *