Crime: வட மாநில வாலிபர்கள் கைது!

Advertisements

ஒடிஷாவிலிருந்து ரயில் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட49 கிலோ கஞ்சா பொட்டலங்கள்பறிமுதல் செய்யப்பட்டு  வட மாநில வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்காடு: பாலக்காடு பட்டாம்பி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரு வாலிபர்கள் பிளாட்பாமில் நின்றுள்ளனர். அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்னர்.

Advertisements

இதில், சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடமைகளை பரிசோதனை செய்தபோது 49 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஒடிஷாவை சேர்ந்த ரவன்ந்திரன் பிரதான் (24), ஜிக்கரியா ஜணி (24) எனத் தெரிய வந்துள்ளது.

இவர்கள் ஒடிஷாவிலிருந்து ரயில் மார்க்கமாகக் கஞ்சா கடத்தி வந்துள்ளதும் இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பட்டாம்பி போலீசார் வாலிபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *