Advertisements

தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கோயம்புத்தூர், ராய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் குஜராத்தில் வீடியோகான்பரன்ஸ் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுடனான பரிக்ஷா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது, குழந்தைகள் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி இல்லாமல் சாப்பிடக்கூட முடியாத நிலையில் அந்த சாதனங்கள் அவர்களுக்கு எஜமானராகிவிட்டன என்றார்.
தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொழில்நுட்பங்களை திறமைகளை மேம்படுத்தவும், ஆற்றலை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முந்தைய வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் ஒரு நல்ல இரவு தூக்கம் தான் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
Advertisements



