மும்பையில் வெப்பநிலை உயரும் – வானிலை ஆய்வு மையம்!

மும்பை:

மும்பையில் குளிர்காலம் முடிவுக்கு வரும் நிலையில், சில நாட்களாக வெயில் அதிகமாகக் காய்ச்சல் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வழக்கமாக, மும்பையில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடைகிறது. ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் சுனில் காம்ளே தெரிவித்ததாவது, வருகிற 4 நாட்களில் மும்பையில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை நேரத்தில் கிழக்கு பக்கம் இருந்து வீசும் காற்றினால் வெப்பநிலை குறைவாக இருக்கும்.

நண்பகலுக்குப் பிறகு, காற்றின் திசை வடமேற்காக மாறுவதால் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது மும்பையில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *