விளையாட்டுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஊக்கத்தொகை வழங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என பாராட்டு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையே ஒரு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதுதான் முதலமைச்சர் கோப்பை குறித்து அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நமது விருந்தோம்பலை வெளிநாட்டினர் பாராட்டினர் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *