
Aadi Amavasai 2023 | Sathuragiri Hills | Sundaramahalingam Temple
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்தக் கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யத் தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 17-ம் தேதிவரை பக்தர்கள் மலையேறிச் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Aadi Amavasai 2023 | Sathuragiri Hills | Sundaramahalingam Temple | Trekking | Pilgrimage | Hindu | Devotee
அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறிக் கோவிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரிக்கு வழக்கத்தைவிட அதிகமாகப் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


