Rangoli Powder: எளிய முறையில் வீட்டிலே தயாரிக்கும் கோலமாவு!

Advertisements

தமிழ் மாதத்தில் மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து 30-ம் நாள் வரை பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலம் இடுவது தமிழரின் பண்பாடாக திகழ்ந்து வருகிறது.

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் கோலமிட்டு கோலத்தின் நடுவே அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக மஞ்சள் நிற பூசணிப் பூவை வைப்பது வழக்கம்.கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த வண்ண மாவு , கலர் பவுடர் விற்பனைக்கு கிராக்கி அதிகம். பொங்கல் பண்டிகை முடியும் வரை  கலர் மாவு கோலம் போடுவார்கள்.

வண்ண கோலமாவுக்கு மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வண்ண, வண்ண கோலமாவுகள் விற்பனை களைகட்டி உள்ளது.

செய்யும் முறை;

மார்கழி மற்றும் தை மாதம் என்றாலே பெண்கள் காலை எழுந்து பல வண்ண வண்ண கோலங்களை போடுவார்கள், அந்த கோலத்திற்கும் கலர் அடிப்பார்கள். அதனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கோலத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக பலர் அதிகம் காசு கொடுத்து கலர் கோலமாவை கடைகளில் வாங்குகின்றன. இனி கடைகளில் கலர் கோலமாவை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே கலர் கோலமாவை தயார் செய்யலாம். அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கலர் கோலமாவு தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

பச்சை இலை சாறு  – தேவைக்கேற்ப
பீட்ரூட் சாறு – தேவைக்கேற்ப
கேசரி பவுடர் ஆரஞ்சு நிறம் – தேவைக்கேற்ப
கேசரி பவுடர் சிவப்பு நிறம் – தேவைக்கேற்ப
தண்ணீரில் குழைத்த மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
புட் கலர் உங்களுக்கு பிடித்த எந்த கலராக இருந்தாலும் வாங்கி கொள்ளுங்கள்.
கோலமாவு – தேவையான அளவு
பச்சரிசி மாவு – தேவையான அளவு
கருப்பு நிற இங்
நீலநிற இங்

கலர் கோலமாவு கலப்பது எப்படி;

முதலில் 1/2 கப் பச்சரிசி மாவில் 1/2 கப் கோலமாவை கலந்து கொள்ளுங்கள்.

பச்சை நிறத்திற்கு எந்த இலையாக இருந்தாலும் சரி அதனை தேவையான அளவு எடுத்து  மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றில் இருந்து சாறு பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அரிசிமாவுடன் கலந்து வைத்துள்ள கோலமாவை 5 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் பிழிந்து வைத்திருக்கும் பச்சை சாறை சிறிதளவு சேர்த்து  அரைக்கவும், அவ்வளவு தான் பச்சை நிறம் தயார்.

பிறகு சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுத்தீர்கள் என்றால் பச்சை நிற கோலமாவு தயார்.

அதேபோல் மற்ற கலர் சாயங்கள் மற்றும் கலர் பொடியை இது போன்று மிக்சியில் அரைத்து எடுத்து, வெயிலில் காயவைத்து எடுத்தீர்கள் என்றால் கலர் கோலமாவு தயார்.
15 விதமான வண்ணங்களில் ராஜஸ்தான் கற்களைக் கூழாக்கி வண்ண பூச்சுகள் கலந்து கோலமாவு விற்பனை செய்து வருகின்றனர். 250 கிராம் கலர் கோலமாவு 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ராஜஸ்தான் கற்களை தூள் செய்யப்பட்டு அதில் வண்ண நிறங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. வெள்ளை நிற கோலமாவில் வண்ண   பவுடர்களை   குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பாக்கெட்டுகளில் குறைந்தது 50 கிராம், 100 கிராம் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வெள்ளை கோல மாவு மட்டும் மூட்டை கணக்கில் வாங்கி அதில் கலர் பவுடர் கலந்து விற்பனைக்கு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *