Sri Srinivasa Perumal Temple: கோவிந்தா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு!

Advertisements

புதுச்சேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோத்ஸவத்தையொட்டி திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுனாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் அருள்மிகு தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வருடாந்திர ப்ரம்மோத்ஸவ விழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் பெருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிஸாவப் பெருமாள் திருத்தேரில் வைக்கப்பட்டு திருத்தேரானது முத்தியால்பேட்டையில் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.அப்போது வழிநெடுகிலிலும் பக்தர்கள் நின்றுசுனாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்து முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற திருத்தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் வடம் பிடித்துப் பெருமாளை வணங்கிச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *