St. Sebastian Church Festival: தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்ப்பு!

Advertisements

வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலத்தடியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் 49ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பெரிய தேர்பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலத்தடியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய 49 ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி பிரார்த்தனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் சொரூபம் வைக்கப்பட்டு பவனி நடைபெற்றது.

செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு, புனித அந்தோணியார் ஆகியோர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேரில் தனி தனியே எழுந்தருளப் புனிதம் செய்யப்பட்டது.பேண்டு வாத்தியங்கள் முழங்கத் தேர் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது.இதில் வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஆதி.ஆரோ, கிறிஸ்தவ சமுதாய தலைவர்புஷ்பராஜ், செயலாளர் ஏசுராஜ், பொருளாளர் சௌரிமுத்து, துணைத்தலைவர் மத்தியராஜ், அருட் சகோதரிகள் ,நாட்டாமை, மற்றும் பஞ்சாயத்தார்கள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *