DMK Vs BJP: கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு திடீர் மீனவர் பாசம்.. பதில்_சொல்லுங்க_மோடி!

Advertisements

10 ஆண்டுகளாகக் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தைப் பிரதமர் மோடி அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தைப் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளதுஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தைப் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடத்தை பா.ஜ.க. அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளதுஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

10 ஆண்டுகளாகக் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவதேன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்புத்திட்டம் என ஒன்றாவதுண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…

#பதில்_சொல்லுங்க_மோடிஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *