ராமதாஸ் எப்படி இருக்கிறார்- மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.!

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாகவும் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ராமதாஸுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மூத்த மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸ் இல்லம் திரும்புவார் எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *