கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் மீனா முத்தையா என அன்புமணி புகழாரம்……!

மீனா முத்தையா அவர்கள்  கல்வித்துறையிலும், கலைத்துறையிலும் ஆற்றிய சேவைகள் ஏராளம் என்று பாட்டாளி  மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி  மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் செட்டிநாட்டு அரசரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ராஜா அவர்களின்  பேர்த்தியும் புகழ் பெற்ற கல்வியாளர்  மீனா முத்தையா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும்,  வேதனையும் அடைந்ததாகக் கூறினார்.

தொடர்ந்து மீனா முத்தையா  அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். கல்வித்துறையிலும், கலைத்துறையிலும் அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம் என்றார்.

மேலும் மீனா முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *