Advertisements

தீவுத்திடலில் வரும் சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைபெறுவதாக இருந்த கார் பந்தயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தீவுத் திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயமானது டிசம்பர் 9 மற்றும் 10- ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் மீட்புக் குழுவினர் களப் பணியில் ஈடுபட்டுள்ளதால் தற்போது வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த இயலாத நிலை இருப்பதால் பந்தயத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பந்தயம் நடத்த தேவையான சூழல் வந்தவுடன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements




