
கள்ளக்குறிச்சியில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுதல் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
கள்ளக்குறிச்சி ஹோட்டல் மற்றும் பேக்கரி, ஸ்வீட்ஸ், டீ ஷாப் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுதல் சிறப்பு முகாம் கள்ளக்குறிச்சியில் உள்ள கரிகாலன் ஓட்டல் மினி ஹாலில் நடைபெற்றது
இந்தச் சிறப்பு முகாமில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் உணவுப் பொருட்களைத் தயாரித்து விநியோகம் மற்றும் சில்லரை விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி உணவுப் பொருட்கள் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெறுவது அவசியம்.
அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் விண்ணப்பங்களைப் பதிவு செய்தார். முகாமில் நகர மன்ற தலைவர் சுப்புராயலு , அனைத்து நகர வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கண்ணன் கௌரவத் தலைவர் சௌந்தர் முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமில் கள்ளக்குறிச்சி பகுதியில் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் பலர் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்.


