இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகம்மூலம் லாபமும் ஆதாயமும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.
ரிஷபம்
இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் இலக்குகளை அடையும் ஆற்றல் மிகுந்து காணப்படும்.உங்கள் பேச்சாற்றல் காரணமாக நீங்கள் பிரபலமாவீர்கள்.பணியிடச் சூழல் முன்னேற்றகரமாக இருக்கும். உங்கள் திறமைகள்மூலம் நீங்கள் பிரகாசிப்பீர்கள். பணியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை காணப்படும். உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். உங்கள் செயல்களின் மூலம் உங்கள் துணையை திருப்திப்படுதுவீர்கள்.இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று உபரிப் பணம் காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் நேர்மறையான எண்ணம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவும்.
மிதுனம்
இன்று சராசரிக்கும் சற்று மேலான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இலக்கை அடைய நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.பணியில் பலன்கள் உங்களுக்குச் சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இறுதியில் உங்கள் நேர்மையான முயற்சியால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.சில சமயங்களில் உங்கள் துணையிடம் பொறுமையின்றி காணப்படுவீர்கள்.உறவில் நல்லிணக்கம் பேண பொறுமை அவசியம்.இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். என்றாலும் தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்படும்.முதுகு மற்றும் மூட்டுக்களில் விறைப்புத் தன்மை ஏற்படும். குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்க்கவும்.
கடகம்
இன்று சூழ்நிலைகள் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தகவல் தொடர்புக் குறைபாடு காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். பணியில் வளர்ச்சி காண நீங்கள் மிகுந்த முயற்சியும் கடின உழைப்பும் கொள்ள வேண்டும்.நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள். இதனால் உங்கள் துணையுடனான உறவு பாதிக்கும். இதனால் புரிந்துணர்வு குறையும்.இன்று பணப்புழக்கம் குறைவாக இருக்கும். நீங்கள் வரவையும் செலவையும் விவேகத்துடன் கையாள வேண்டும்.இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கால் வலி பாதிப்புகளால் அவதிப்பட நேரலாம். பதட்டத்தைக் குறைக்க தியானம் மேற்கொள்ளவும்.
சிம்மம்
இன்று சிறப்பான சூழ்நிலை காணப்படும். உங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும். உங்கள் சுய முயற்சிமூலம் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறப்பான நாள்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். கடினமான பணிகளிக் கூட எளிதாக முடிக்கும் திறமை உங்களிடம் காணப்படும்.உங்கள் துணையுடன் உரையாடும்போது அமைதியான அணுகுமுறை வேண்டும். இந்த அணுகுமுறை நல்ல சூழ்நிலையை உருவாக்கும்.போதிய பணம் காணப்பட்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் புதிய முதலீடுகளுக்குத் திட்டமிடலாம்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
கன்னி
இன்று பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும். இன்று உங்கள் இலக்குகளை அடைய உங்கள் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. என்றாலும் உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை. இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்காமல் இருக்க உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பணியிடச் சூழல் சவால்கள் நிறைந்து காணப்படும். பணிகள் அதிகமாகக் காணப்படும் என்பதால் பணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.குடும்பப் பிரச்சினைகள் சிலவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரும்.இதனால் உங்கள் துணையுடனான நல்லுறவு பாதிக்கப்படும்.இன்று அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. வீட்டுப் புனரமைப்பு போன்ற பொறுப்புகள் அதிகமாகி பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.உங்கள் தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரும். இது உங்களுக்குச் சற்று கவலையை உருவாக்கும்.
துலாம்
இன்று துடிப்பான நாளாக இருக்காது. எந்தவொரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கலாம். மனதை பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்துங்கள்.கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணிகளில் தவறுகள் செய்ய நேரலாம். உங்கள பணிகளைக் கவனமுடன் திட்டமிட வேண்டும்.இருவரிடையே நிலவும் தவறான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் சில விரும்பத்தாகத தருணங்களைச் சந்திக்க நேரலாம்.இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகளை இன்று நீங்கள் சந்திக்க நேரலாம்.அதனைக் கடினமாக உணர்வீர்கள்.தூக்கமின்மை காரணமாக இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.பணியிடத்தில் பதட்டம் கானபப்டும். சகபணியாளர்களின் மூலம் தொல்லைகள் ஏற்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பெண் ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்கவும்.மோசமான புரிந்துணர்வின் காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எனவே உங்கள் துணையுடன் பேசும்போது அமைதியாக அணுகுவது நல்லது.இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். இன்று பண இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை கவனமாகச் செலவு செய்ய வேண்டும்.தோல் அரிப்பு காரணமாகத் தூக்கம் பாதிக்கப்படும். இனிப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தனுசு
இன்று நன்மைகள் விளையும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.இன்றைய செயல்களைத் திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டியது அவசியம்.பணிகள் அதிகமாகக் காணப்பட்டாலும் நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். பணிகளைத் தன்னம்பிக்கையுடன் கையாள்வீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள்.குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சியில் இருவரும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.இன்று பணப்புழக்கம் திருப்தியை அளிக்கும். இருக்கும் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.உங்களிடம் காணப்படும் நேர்மறையான எண்ணம் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். உங்கள் சுய முயற்சிமூலம் உங்கள் செயல்களில் வளர்ச்சி காண்பீர்கள். புதுமையான முறையைக் கையாள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம்.பணிகள் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பணிகள் தரம் நிறைந்ததாக இருக்கும். இதனால் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். சமூகமான சூழ்நிலை காரணமாகப் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும்.இன்று அதிக பணவரவு காணப்படும். பொருளாதார பாதுகாப்பை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆன்மீக நிகழ்வுகளுக்குச் செலவு செய்வீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்று துடிப்பான நாளாக இருக்காது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கஷ்ட நேரங்களில் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் செயல்களின் முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை காணப்படும்.பணியில் வளர்ச்சி காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். என்றாலும் குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை காணப்படும். அது இன்றைய நாளின் மகிழ்ச்சியான சூழ் நிலையைப் பாதிக்கும்.இன்று நிதிவளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க முடியாது.இன்று தூக்கமின்மையும் அதன் காரணமாய் தலைவலியும் ஏற்படும்.
மீனம்
இன்று எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. தியானப் பயிற்சி ஆறுதலை அளிக்கும்.பணியிடத்தில் சவால்களைச் சந்திக்க திறமையாகத் திட்டமிட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும்போது நீங்கள் தவறு செய்ய நேரலாம். குடும்பப் பிரச்சினை காரணமாக மந்தமான மன நிலை காணப்படும். உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.வீட்டை நவீனமாக்க முயல்வீர்கள். ஆனால் போதிய பணம் கையில் இருக்காது.எதிர்கால செலவுகளுக்காகப் பணத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் காணப்படும்.உங்கள் தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரும். இது உங்களுக்குச் சற்று கவலையை அளிக்கும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.