
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்து 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
* அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 11,176 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
* 3 நாட்களில் சென்னையிலிருந்து 4,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
* கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்திலிருந்து மட்டும் பஸ்கள் இயக்கப்படும்.
* கடந்தாண்டு 5 இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 3 இடங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்படும்.
* இந்த ஆண்டு தாம்பரத்திலிருந்து பஸ்கள் புறப்படாது.
* தீபாவளியை ஒட்டிச் சென்னையிலிருந்து மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.



