
மழைக்கு ருசியாக சுடச்சுட சாப்பிட சுலபமாக ஒரு வேறுபட்ட சாதம்.. வெரைட்டி ரைஸ் சத்தான சாதம் செய்யலாம் …இன்று நாம் சோயா பிரைட் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சோயா பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்;
சோயா கொட்டைகள் – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் மஞ்சள் அல்லது ஆரஞ்ச்– 1 சிட்டிகை

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

பூண்டு – 4
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

வினிகர் – அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
அடுத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை:
முதலில் சாதத்தை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
சோயா கொட்டைகளை தேவையான அளவு எடுத்து அதை சூடான நீரில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட்டு வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் அதில் தேவையான அளவு உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு, 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு,
அதில் 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் மிக்ஸ் செய்து வைத்திருக்கும் Soya Chunks சேர்த்து பொரிக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பொடிதாக நறுக்கிய பூண்டு 4 சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் 2, கீறிய பச்சை மிளகாய் 2, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், அரை டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்கவும்.
பின்னர் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் வேகவைத்த சாதம் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அதன் பிறகு அதில் பொறித்த சோயா கொட்டைகளை சேர்த்தால் சுவையான சோயா பிரைட் ரைஸ் தயார்.


