ஹார்மூஸ் ஜலசந்தியை இனி திறக்க வாய்ப்பில்லை : ஈரான் எச்சரிக்கை.!!

மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி மூடப்பட்டு இருக்கும் என ஈரானின் புரட்சி புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் புரட்சி புரட்சிகர காவல் படை அந்நாட்டின் ஊடகத்திற்கு ஈரான்,அமெரிக்கா போர் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி மூடப்பட்டு இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த கப்பலுக்கும் இந்த வழியே கடந்து செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

அந்நிய சக்திகளின் சட்டவிரோத குறுக்கீட்டை தொடர்ந்து பாதுகாப்பு சூழலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொTருட்கள் கொண்டு செல்லப்படும் சரக்கு கப்பல்கள் தேங்கும் அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *