
தென்ஆப்பிரிக்க அணி இரண்டாவது வெற்றி!
லக்னோ: 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாயி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி வீரர் டி காக் சதம் அடித்து அசத்தினார்.தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக விளையாடினர்.கடைசியாக 50 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது தென்ஆப்பிரிக்க அணி.
விக்கெட் வீழ்ச்சி:
108-1 (டெம்பா பவுமா, 19.4) 158-2 (ராசி வான் டெர் டுசன், 28.3) 197-3 (குயின்டன் டி காக், 34.5) 263-4 (ஐடன் மார்க்ரம், 43.1) 267-5 (ஹென்ரிச் கிளாசென், 44.1) 310-6 (மார்கோ ஜான்சன், 49.1) 311-7 (டேவிட் மில்லர், 49.4)
அதனைத் தொடர்ந்து 311 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விளையாடினர். கடைசியாக ஆஸ்திரேலியா அணி அணைத்து விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.
விக்கெட் வீழ்ச்சி:
27-1 (மிட்செல் மார்ஷ், 5.5) 27-2 (டேவிட் வார்னர், 7) 50-3 (ஸ்டீவன் ஸ்மித், 9.5) 56-4 (ஜோஷ் இங்லிஸ், 11.1) 65-5 (கிளைன் மேக்ஸ்வெல், 16.1) 70-6 (மார்கஸ் ஸ்டோனிஸ், 17.2)
இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது !


