PM Modi:காங்கிரசை விட நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது!

சண்டிகர்: ‘காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது’ எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, சோனாபட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் விவசாயத்துறையில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறி உள்ளது. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வை அமோக வெற்றி பெற ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஊழல் விவகாரத்தைக் கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்கொள்கிறார்.

இடஒதுக்கீடு
காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது ஹரியானாவின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியைப் பணயம் வைப்பதாகும். தவறுதலாகக் கூடக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். காங்., அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைதி பிடிக்காது. காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை கொண்டுவர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ., வில் உள்ளது.

ஆதரவு பெருகுது!
காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது. இன்று எதுவாக இருந்தாலும், அதில் ஹரியானாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பெருமையுடன் கூறுகிறேன். ஹரியானாவில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் நெருங்கி வருவதால், பா.ஜ., வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *