Snake Viral Video: பாம்பை பாடாய் படுத்தும் இளைஞர்!

Advertisements

Snake Viral Video: இன்றைய பரபரப்பான உலகில், சமூக ஊடகங்களில் நாம் பகிரும் செய்திகள் சில ஆச்சரியம் கலந்த பயத்தை உண்டாக்கும். அப்படியாக  வைரலான வீடியோவில்  பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருந்து வருகின்றது.

மனிதர்களை அதிக அளவில் பயமுறுத்தும் உயிரினம் பாம்பு. தெய்வமாக வணங்கப்படும் உயிரினம் கூட.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் பயங்கர விபத்து ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு குடிபோதையில் ஒருவன் பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். தான் சிவனின் தந்தை என்று சுற்றியிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது தவிர, நான் மகாதேவனின் அவதாரம் என்று பாம்பிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தயார். “நீ என்னைக் கடித்துக் காட்டு” என்றும் கூறிக் கொண்டே இருந்தார். இதற்கிடையில் குடிகாரனின் கழுத்தில் பாம்பு கடித்ததால் அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ரோஹித் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார். மேலும் பாம்பை இறுக்கமாக பிடித்து கையால் அடிப்பதும் காணப்படுகின்றது. மேலும் சில சமயங்களில் அவர் கை மற்றும் நாக்கைக் கடிக்க பாம்பை தூண்டுவதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம். இதற்கிடையில், பாம்பு கடித்ததால் அந்த இளைஞன் உயிரிழந்தார். விளையாட்டு வினையானது. உயிரும் போனது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *