ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலத்தை நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் வளைவான பாலம் கட்ட பட்டுள்ளது. . இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இந்த பாலத்தை நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட உள்ளார். இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும் கத்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

