தலைமைத் தேர்தல் ஆணையர் மீது தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைப்பதாக பாஜக நாடளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் காங்ராவில் பாஜக நாடளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் அரசு நீண்ட காலம் மாநிலங்களை ஆட்சி செய்த நிலையில் அவர்களுக்கு அதிருப்தி அலை எதையும் உணரவில்லை என்று கூறினார். பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் பாஜக அரசுகள் மீண்டும் மீண்டும் அமையும்போது, அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடுகின்றனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம் மீதும், எஸ்.ஐ.ஆர் மீதும், தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மீதும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது என்று குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


