Advertisements

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால் அக்கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பீஹார் சட்டசபைக்கு நவ., 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும், நவ., 11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில் தொகுதிகள் பங்கீடு தொடர்பான பேச்சு முடிவடைந்து, அது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அதில், பா.ஜ., மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கு தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்களும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஜ்யசபா உறுப்பினரான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் இந்த இரு கட்சிகளும் அதிருப்தியை தங்களுடைய வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், “தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால், எங்களை குறைத்து மதிப்பிட்டு, குறைவான தொகுதிகளை ஒதுக்கியது தான் வருத்தத்தை அளிக்கிறது எனவும். இது தேர்தலில் நிச்சயம் இது எதிரொலிக்கும்,” என்று கூறினார்.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது, 15 இடங்களை கேட்டுப்பெற மஞ்சி முயற்சித்தார். ஆனால் கடைசியாக, எட்டு தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்கும் குறைவாக வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், அவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா வும் தன் சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கட்சி தொண்டர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும் என நினைக்கிறேன் நம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தவர்களுக்கு, இம்முடிவு வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் குறித்து நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே, ஏமாற்றத்தை புறந்தள்ளிவிட்டு தேர்தலுக்காக அனைவரும் பணியாற்ற வேண்டும். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் அக்கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, தே.ஜ., கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஆனால், முதன் முறையாக இந்த தேர்தலில் மாறி இருக்கிறது. இம்முறை, பா.ஜ.,வுக்கு இணையாக 101 தொகுதிகளில் மட்டுமே நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. இதன் மூலம் முதலமைச்சர் நிதிஷ் குமாரை, பா.ஜ. க ஓரங்கட்டப் பார்க்கிறது’ என, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே பீகார் மாநிலத்தின் ஆளும் கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க கோரி முதலமைச்சர் நிதிஷ்குமார் வீட்டு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கோபால்பூர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கோபால் மண்டல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்குமோ என்கிற ஐயத்தில் அவர் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திக்க வந்துள்ளார். சந்திக்க அனுமதிக்காததால் அவர் நிதிஷ்குமார் வீட்டு வாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க விட்டால் இங்கிருந்து செல்ல முடியாது என்று அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
Advertisements



