Sivakasi Fire Accident: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

M.புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது”

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இதில் என்பதற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்,

இந்தப் பட்டாசு ஆலையின் முன்புறம் பட்டாசு கடையும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு கடையிலிருந்து வெளியே எடுத்துச் சேம்பில் பார்த்து வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி வெடித்து கடைக்குள் சிதறியது.இந்த நிலையில் கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டாசு கடையிலிருந்து வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்தநிலையில் M.புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *