ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.
சென்னையில் கடந்த 5 மணி நேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகப் பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ. மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. எழும்பூர், ஆர்பிஐ, பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர், ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளைவ் ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.