சென்னை:
சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து கலெக்டரிடம் கேட்டு அறிந்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரங்கள் கேட்டு அறிந்த முதலமைச்சர், மழை முன் எச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
* இன்றிரவு காற்றும் மழையும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் துரிதமாகச் செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழையை எதிர்கொள்ளச் சென்னையில் மட்டும் 10,000 நபர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* சென்னையில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இன்று தொடங்கி நாளைக் காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர் அறிவுறுத்தினார்.