Actor Ajith Kumar: குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அஜித்!

Advertisements

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் தயரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் நண்பர்கள் முன்பு கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *