
செங்கோட்டையில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரணம் அறிவித்துள்ளார்
டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரணம் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் ரூபாயும் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார்.



