Advertisements

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.
அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் காவலர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற காலனியும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29 ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது.
ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான இப்படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தங்கள் பணியைத் தொடங்க உள்ளனர்.
Advertisements



