மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் சந்திப்பு!

Advertisements

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இருநாடுகளியான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவரும் அவருடன் வந்துள்ள உயர்நிலைக் குழுவினரும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது தொழில், வணிகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.

முன்னதாகச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *