ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி..நடந்தது என்ன..?

Advertisements

தமிழ்நாட்டில் சாதாரண பெயிண்டராக சென்னையில் வேலை பார்த்து , தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வகுத்தவர் தான் நடிகர் சூரி . இவர் நடித்த பல படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றது . இந்நிலையில் , ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூரியின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.சூரி நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்​நிலை​யில், எக்ஸ் தளத்​தில் ரசிகர் ஒரு​வர், நடிகர் சூரியை டேக் செய்​து, “உங்​கள் பட ஷூட்​டிங் எங்​கள் ஊரில் நடப்​பது மகிழ்ச்​சி. இரவு நேர படப்​பிடிப்​பில் வேடிக்கை பார்க்க வரும் எங்​கள் பகுதி மக்களிடம், உங்​கள் பவுன்​சர்​கள் கொஞ்​சம் கடுமை​யாக நடந்து கொள்​கிறார்​கள்” என்று கூறி​யிருந்​தார்.

இதற்​குப் பதிலளித்​துள்ள சூரி, “உங்​கள் அன்​புக்​கும் ஆதர​வுக்​கும் நன்​றி. படப்​பிடிப்​பில் ஏற்​பட்ட தவறுக்கு மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறோம். இதைத் தயாரிப்​புக் குழு​விட​மும், பவுன்​சர் சகோ​தரர்​களிட​மும் தெரி​வித்து மிகுந்த கவனத்​துடன் இருக்​கச் சொல்கிறோம். எப்​போதும் போல உங்​கள் அன்பே எங்​களுக்கு பலம்” என்று பதிவிட்​டுள்​ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *