பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத தவெக அரசை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சூழலில்,உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிந்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

