தவெக அரசு விமர்சனங்களுக்கு அஞ்சுவது அல்ல….அமைச்சர் ரமேஷ் !

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருக்கோவில்களில் கோவில் நிர்வாகத்தின் மூலமாகவே பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் திட்டம் குறித்து இன்று ஆய்வு செய்தோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் தேவைக்கேற்பவும், முன்னுரிமை அடிப்படையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தவெக அரசு விமர்சனங்களுக்கு அஞ்சும் அரசு அல்ல. புதிதாகக் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்துள்ள நாங்கள், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட கட்சியினரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறோம்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவோர் மீது கைது நடவடிக்கை தொடரும்.  இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *