சிறையில் இருந்து வெளிவந்த நாதக கார்த்திகா..காவல்துறைக்கு எதிராக பேச்சு.!

ஆளுங்கட்சியினர் தங்களது கையாலாகாத தனத்தை மறைக்கவே அராஜக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் விஜய் கடந்த 4-ஆம் தேதி அங்கு சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற சாலை மறியல், காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், கட்சி நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக் பரித் உள்ளிட்ட 12 பேரைத் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 12 பேரும் ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகா உள்ளிட்ட 9 பேரும் கோவை மத்தியச் சிறையிலிருந்து இன்று வெளியே வந்தனர்.

அப்போது சிறை வாசலில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா பேசியபோது, தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு பணியாற்ற நினைக்கும் வேட்பாளர்களாகிய தங்களுக்கு வாக்குக் கேட்க முழு உரிமை உள்ளது என்று கூறினார். ஆனால், கடந்த 4-ந்தேதி முதலமைச்சர் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், மற்ற ஜனநாயக அமைப்புகளோ, வேட்பாளர்களோ பிரசாரம் செய்யக்கூடாது என்று முடக்கியது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது என்று குறிப்பிட்டார்.

தங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திச் சிறையில் தள்ளியதாகக் கூறினார். ஆளுங்கட்சியினர் தங்களது கையாலாகாத தனத்தை மறைக்கவே இதுபோன்ற அராஜக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, வழக்கில் ஜாமீன் பெற்றவர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் நன்மாறன், “ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின்போது காவல்துறை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *