Shravan Kumar: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

Advertisements

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

Advertisements

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்சடங்கு காசோலை 5 நபர்களுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *