
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விழுப்புரம் மண்டலம் கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இறுதியில் அதிமுக தேர்தல் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதிமுக தேர்தல் தயாரிப்புக் குழுவினர் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்து விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த மக்களிடம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயக்குமார் வளர்மதி ஒ. எஸ் மணியன் உதயகுமார் மற்றும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தை கேட்பு கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வணிகர்கள் பொதுமக்கள் மீனவர்கள் தொழிற் சங்கத்தினர் எனை ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இறுதியில் அதிமுக தேர்தல் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது,

