Bike Accident: விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்படும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

Advertisements

மேலூர் அருகே கார்மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான நிலையில் இளைஞர் தூக்கி வீசப்படும் பதபத வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிமலைப்பட்டியைச் சேர்ந்தவர் பரத், 27 வயதான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பரத் தனது இருசக்கர வாகனத்தில் புலிமலைப்பட்டியிலிருந்து மேலூர் நோக்கி ஒத்தப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்பொழுது, எதிரே மேலூரிலிருந்து கோட்டநத்தாம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், பரத் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பரத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த விபத்துகுறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில். இந்த விபத்துகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

அதில் இருசக்கர வாகனத்தில் வரும் பரத், நிலை தடுமாறி எதிரே வந்த கார்மீது மோதிய வேகத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான பத பத வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *