Australia vs Pakistan CWC: போலிசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்!

Advertisements

போலிசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ வைரல்!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே  அக்டோபர் 20 -ஆம் தேதி நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறிய ரசிகருக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்றது.

முன்னதாக போட்டி நடந்துகொண்டிருந்தபோது பாகிஸ்தான் வீரர் ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறியுள்ளார். அவர் அருகில் வந்து போலீஸ் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் ஜிந்தாபாத்  என்றெல்லாம் கூறக்கூடாது என்று சொல்லவே, கோபமடைந்த ரசிகர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்திய ரசிகர்கள் மட்டும் பாரத் மாதா கி ஜே என்று கூறலாம், நாங்கள் சொன்னால் தவறா என கோபமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போலீஸ் “ ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்வது சரியானது. ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்பது தவறானது” என்று கூறினார்.

இந் நிகழ்ச்சி வீடியோ எடுத்த ரசிகர்கள் இணையத்தில் பரவ விட வைரலாகி வருகிறது. அதே சமயம் நெட்டிசன்களின் விமர்சனங்களும் தொடர்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *