Equestrian: மீண்டும் ஒரு தங்கப்பதக்கம்!

ஆசிய விளையாட்டில் குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

சுதிப்தி ஹஜிலா, திவ்ய கீர்த்தி சிங், ஹர்டே ஷிடா, அனுஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி குதிரையேற்றம் போட்டி டிரஸ்ஏஜ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 41 ஆண்டுகளில் குதிரையேற்ற போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இதேபோலப் பாய்மரப்படகு போட்டி ஆண்கள் டிங்லி ஐஎல்சிஏ7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம், இந்தியா இதுவரை வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில்  3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் இந்திய அணி 7ம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *