Jasprit Bumrah: பரிசு வழங்கிய ஷாகின் அப்ரிடி!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி பரிசு வழங்கிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

கொழும்பு: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார்.

இந்த நிலையில் இவர்களுக்குச் செப்.4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பின்போது மனைவியுடன் இருப்பதற்காக நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பும்ரா விலகினார். குழந்தை பிறப்புக்கு பின்னர் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பும்ரா அணியில் இடம்பிடித்து இருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய அணியின் பும்ராவை சந்தித்தார். அப்போது ஷாகின் அப்ரிடி, அண்மையில் தந்தையான பும்ராவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பும்ரா, ஷாகின் அப்ரிடிக்கு நன்றி கூறினார். இருவரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர்.

இந்த வீடியோவைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “Jasprit Bumrah: பரிசு வழங்கிய ஷாகின் அப்ரிடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *