Shah Rukh Khan: பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

Advertisements

பாலிவுட் நடிகர் ஷாருக்கான்நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது…

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

ஜி20 உச்சி மாநாடு தொடர்பாகப் பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்குப் பதில் அளித்த ஷாருக்கான், “ஜி20 அமைப்புக்கு இந்தியா வெற்றிகரமாகத் தலைமை வகித்து, உலக எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றுவதற்கு நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருப்பதற்கு மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.

“இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் தலைமையில், நாம் ஒற்றுமையாக வளர்ச்சியடைவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முன்னதாகப் பாலிவுட் பிரபலம் அனுபம் கெர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *