Sanatana Dharma: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உதயநிதி!

Advertisements

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி’ எனப் பேசியிருந்தார்…

சென்னை: அமைச்சர் உதயநிதி சமூக வலைதளத்தில் கொசுவை விரட்டுவதை உணர்த்தும் வகையில் கொசுவர்த்தி சுருள் படத்தைப் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி’ எனப் பேசியிருந்தார். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கருத்துக்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தன் கருத்திலிருந்து பின்வாங்காமல் உதயநிதி பிடிவாதமாக இருந்து வருகிறார். சில இடங்களில் உதயநிதியின் புகைப்படத்தைக் காலணியால் தாக்குவது, மிதிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதற்கெல்லாம் சமூக வலைதளமான ‘எக்ஸ்’-ல் உதயநிதி சிரிப்பது போன்ற ‘ரிப்ளை’யை அளித்தார். அத்துடன் தற்போது கொசுவர்த்தி சுருளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே கொசுவை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்த உதயநிதி, தற்போது கொசுவை விரட்டும் கொசுவர்த்தி சுருள் படத்தைப் பகிர்ந்தது, சனாதன தர்மம் பற்றிய தன் கருத்தை அவர் மீண்டும் மறைமுகமாக வெளிப்படுத்துவதாகச் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *