Sexual Harassment: போலீஸ் மனைவியைப் பலாத்காரம் செய்ய முயற்சித்த காவலர்!

Advertisements

பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் காவலரின் மனைவியைப் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மற்றொரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன்(31). கடந்த 2017-ம் ஆண்டுக் காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி, தினமும் வேலைக்குச் சென்று வருகிறார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் பிரபாகரன் கடந்த 12-ம் தேதி பணி முடிந்து இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மற்றொரு முதல்நிலை காவலர் ஒருவரின் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவரைப் பிரபாகரன் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அலறிக் கூச்சலிட்ட படியே அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தனது வீட்டிற்கு ஓடிச்சென்றுள்ளார்.

இதையடுத்து  நடந்த சம்பவத்தைத் தனது கணவரிடம் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இதையடுத்து பிரபாகரனை ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீசார் தர்ம அடி கொடுத்துள்ளார்கள். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு  வருகிற 27-ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *